இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: ஒரு எம்.எல்.ஏ. கூட பிரிந்து செல்லவில்லை- கெஜ்ரிவால்

Published On 2024-02-17 08:54 GMT   |   Update On 2024-02-17 09:26 GMT
  • கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
  • ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பா.ஜனதாவுக்கு 8 இடங்களும் உள்ளன. தனிப் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வருகிறார்.

ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறினார்.

இந்தநிலையில் டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கெஜ்ரிவால் நேற்று தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று டெல்லி சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் "ஆம் ஆத்மியின் ஒரு எம்.எல்.ஏ. கூட பிரிந்து செல்லவில்லை.

2 உறுப்பினர்கள் உடல்நலம் சரியில்லாத காரணத்தில் கலந்து கொள்ளவில்லை. 3 உறுப்பினர்கள் சொந்த பணி காரணமாக வெளியே சென்றுவிட்டனர். 2 பேர் ஜெயிலில் உள்ளனர். ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்" என்றார்.

Tags:    

Similar News