இந்தியா

காஷ்மீரில் இரவு நேர ரோந்து பணிக்கு பெண் காவலர்கள் நியமனம்

Published On 2023-05-05 05:18 GMT   |   Update On 2023-05-05 05:18 GMT
  • இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
  • கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும்.

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இரவு நேரத்திலும் எந்தவித பயமுமின்றி நடமாட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக பெண்கள் இரவில் சுதந்திரமாக கடைவீதிகளுக்கு சென்று வர மாநில போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஜம்முவில் உள்ள 6 முக்கிய சந்திப்புகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆயுதங்களுடன் அவர்கள் ஆண் காவலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பெண்கள் இனி சுதந்திரமாக இரவிலும் நடமாடலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கை மூலம் ஜம்முவில் உள்ள பெண்கள் கூறும்போது, கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும் என்று கூறினர்.

Tags:    

Similar News