இந்தியா

பீகாருக்கு நவம்பர் 14-ம் தேதிதான் உண்மையான தீபாவளி: அமித்ஷா

Published On 2025-10-25 04:21 IST   |   Update On 2025-10-25 04:21:00 IST
  • பீகாரின் சிவன் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.
  • ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.

பாட்னா:

பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் ரவுடியான சகாபுதீனின் மகனை ராஷ்ட்ரீய ஜனதா தளம் களமிறக்கி உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது:

சகாபுதீனின் மகன் படுதோல்வி அடைவதை இங்குள்ள மக்கள் உறுதிசெய்ய வேண்டும்.

லாலு பிரசாத் மற்றும் ரப்ரி தேவியின் காட்டாட்சியை மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து உள்ளனர்.

பீகார் மக்கள் தேர்தல் முடிவு வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிதான் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

ராஷ்டிரீய ஜனதா தளமும், அதன் கூட்டணி கட்சிகளும் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும்.

ஊடுருவல்காரர்கள் இங்கேதான் இருக்கவேண்டும் என்கிறார் ராகுல் காந்தி.

ஆனால் ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News