இந்தியா

2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு - உள்துறை மந்திரி அமித்ஷா

Published On 2022-10-27 11:19 GMT   |   Update On 2022-10-27 11:19 GMT
  • அரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
  • அப்போது பேசிய அவர் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது என்றார்.

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்பட கையாளுவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும்.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசுசாரா நிறுவனங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்

என தெரிவித்தார்.

Tags:    

Similar News