இந்தியா

உள்துறை மந்திரி அமித் ஷா

வாக்கு வங்கி அரசியலுக்காக ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கிறது காங்கிரஸ்- உள்துறை மந்திரி அமித் ஷா பேச்சு

Published On 2022-11-22 10:07 GMT   |   Update On 2022-11-22 10:14 GMT
  • சர்தார் படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்தது.
  • காங்கிரஸ் காலம் முடிந்து, பிரதமர் மோடியின் காலம் தொடங்கி விட்டது.

காம்பத்:

குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கிறது. இது போன்ற காரணங்களை ஆதரித்தால், அந்த வாக்குகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

நான் எந்த வாக்குகளைப் பற்றி பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்களின் காலம் இப்போது முடிந்துவிட்டது, பிரதமர் மோடியின் காலம் தொடங்கி விட்டது. ராகுல்காந்தி அயோத்தி செல்ல டிக்கெட்டை பதிவு செய்யுங்கள். ஏனென்றால் அங்கு பிரம்மாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது

என்னுடைய சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் சர்தார் வல்லபபாய் படேலைப் பற்றிப் பேசிக் கேட்டதில்லை. படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்தது. நாட்டின் முதல் துணைப் பிரதமரின் இறுதிச் சடங்குகள் கூட சம்பிரதாயமற்ற முறையில் நடைபெற்றன.

அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் கட்டப்படவில்லை. ஆனால் குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் இப்போது படேலைப் புகழ்ந்து பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News