இந்தியா

புதையலுக்கு பிறந்தநாள் கொண்டாடிய அகிலேஷ் யாதவ்

Published On 2023-11-11 13:29 IST   |   Update On 2023-11-11 14:03:00 IST
  • மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தது.
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிறந்ததால் காழஞ்சி பிறப்பு உலக அளவில் செய்தியானது.

லக்னோ:

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகமான ஒரு மாதத்துக்குள் ஒரு குழந்தை பிறந்தது.

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு வங்கியில் சர்வேஷா தேவி வரிசையில் காத்திருந்தபோது காழஞ்சி நாத் பிறந்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிறந்ததால் இவனது பிறப்பு உலக அளவில் செய்தியானது. காழஞ்சி என்றால் புதையல் என்று பொருள்.

சின்னஞ்சிறு காழஞ்சி மாநில தேர்தல் பிரசாரத்தில் சுவரொட்டிகளில் இடம் பெற்றான். ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தின் சுவரொட்டியில் குழந்தை இடம்பெற்றது.

குழந்தை பிறந்த பிறகு சர்வேஷா தேவிக்கு வங்கி வரிசையில் காத்திருந்தபோது குழந்தை பிறந்தமைக்காக நிவாரணமாக அரசு 2 லட்சம் ரூபாய் அளித்தது.

இந்நிலையில், லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் காழஞ்சி நாத்தின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

Tags:    

Similar News