இந்தியா
null

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டியை ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பும் இந்தியா

Published On 2025-06-19 10:26 IST   |   Update On 2025-06-19 10:27:00 IST
  • இதுவரை 210 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
  • கருப்பு பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.

அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்தனர். இதுவரை 210 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்காக, இந்திய அதிகாரிகள் விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தின் சேதமடைந்த கருப்புப் பெட்டியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்திற்கு (NTSB) அனுப்ப உள்ளனர்.

பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததால், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற அமெரிக்கா அனுப்ப உள்ளது.

Tags:    

Similar News