அகமதாபாத் விபத்து எதிரொலி: 20% வரை குறைந்த ஏர் இந்தியா புக்கிங்..!
- விமான விபத்தில் 242 பேரில் 21 பேர் உயிரிழந்தனர்.
- பல்வேறு வழித்தடத்தில் விமான சேவையை தற்காலிகமாக ஏர் இந்தியா சஸ்பெண்ட் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மேலும் கல்லூரி வளாக கட்டிடம் மற்றும் அதன் அருகில் இருந்தவர்களும் உயிரிழந்தனர். மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் புக்கிங் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச புக்கிங் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான புக்கிங் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புக்கிங் செய்தவர்களும் ரத்து செய்து, மாற்று விமான நிறுவனத்தை நாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமான நிறுவனம், பல வெளிநாட்டு வழித்தடங்களில் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்தியுள்ளது.