அகமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட 259 உடல்கள்.. 256 உடல்கள் குடும்பத்திடம் ஒப்படைப்பு
- 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர்.
- 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சசிறிது நிமிடத்திலேயே அருகிலிருந்த மருத்துவ மாணவர்கள் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விபத்து நடந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு, 259 பேரின் உடல்கள் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 199 இந்தியர்கள், 60 இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா நாட்டவர்கள் அடங்குவர். 256 உடல்கள் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மூன்று பிரிட்டிஷ் நாட்டவர்களின் உடல்களை விமானம் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்ததாலும், சேதமடைந்ததாலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டது.
259 உடல்களில் , 253 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலமும், மீதமுள்ள ஆறு பேரின் உடல் அடையாளம் முக அம்சங்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 253 பேரில், 240 பேர் விமானத்தில் பயணித்தவர்கள், 13 பேர் விமான விபத்தால் தரையில் பலியான பயணிகள் அல்லாதவர்கள் ஆவர்.
இதுவரை விபத்தில் உயிரிழந்த 19 பயணிகள் அல்லாதவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் டிஎன்ஏ சோதனை மூலமாகவும், ஆறு பேர் முக அடையாளம் மூலமாகவும் அடையாளம் காணப்பட்டனர்.