இந்தியா

அப்போ விவசாயிகள்... இப்போ இளைஞர்கள்: அக்னிபாத் திட்டத்தை விமர்சித்த விவசாய சங்க தலைவர்

Published On 2022-06-16 16:13 GMT   |   Update On 2022-06-16 16:13 GMT
  • மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் 13 மாதங்கள் பாதிக்கப்பட்டதாக ராகேஷ் திகாய்த் குற்றச்சாட்டு
  • ராணுவத்தில் சேருவதற்காக நான்கு ஆண்டுகளாக தயாராகி வந்த அரியானா வாலிபர் தற்கொலை

நொய்டா:

ராணுவத்தில் ஒப்பந்த முறையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் 13 மாதங்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் இன்று தவறான முடிவினால் இளைஞர்கள் விளைவை எதிர்கொண்டுள்ளனர். ராணுவத்தில் சேர்பவர்களும் விவசாயிகளின் மகன்கள் என்பதை அரசு அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களுக்காகவும், நம் பிள்ளைகளுக்காகவும் கடைசி மூச்சு வரை போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ராணுவத்தில் சேருவதற்காக நான்கு ஆண்டுகளாக தயாராகி வந்த அரியானா வாலிபர், அரசாங்கம் அக்னிபாத் திட்டத்தை அறிவித்தபிறகு தற்கொலை செய்துகொண்டார். அவரது படத்தையும் ராகேஷ் திகாயித் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News