இந்தியா

ரூ.74 லட்சமாக குட்டி போட்ட ரூ.1 லட்சம் கடன்.. கிட்னியை விற்றும் கடன் தீரவில்லை என விவசாயி வேதனை

Published On 2025-12-17 04:30 IST   |   Update On 2025-12-17 04:30:00 IST
  • வாங்கிய கடனுக்கு தினசரி வட்டியாக 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • கம்போடியா நாட்டுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க முடிவு செய்த அவர் கந்துவட்டி நபர்களிடம் தலா 50 ஆயிரம் வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனுக்கு தினசரி வட்டியாக 10,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி மட்டுமே உயர்ந்து, ஒரு கட்டத்தில் மொத்த கடன் தொகை 74 லட்சம் ரூபாயாக எகிறியது.

கடனை அடைக்க தனது 2 ஏக்கர் விவசாய நிலம், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என அனைத்தையும் விற்றுள்ளார். இருப்பினும் கடன் தீரவில்லை.

கந்துவட்டி கும்பலின் மிரட்டல் அதிகரித்ததால், அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் பேரில், இடைத்தரகர் மூலம் கம்போடியா நாட்டுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இவ்வளவு செய்தும் இன்னும் கடன் தீரவில்லை எனக் கூறி கந்துவட்டி கும்பல் மிரட்டுவதால், காவல்துறையை நாடி தனக்கு நீதி வேண்டும் என அவர் புகார் அளித்துள்ளார்.

போலீசில் புகார் செய்த பிறகும் அவர்கள் கவலைப்படவில்லை என்று குற்றம்சாட்டிய விவசாயி தனக்கு நீதி கிடைக்காவிட்டால், மும்பையின் மந்திராலயாவில் உள்ள மாநில தலைமையகத்தின் முன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News