இந்தியா

நடிகர் பாலகிருஷ்ணா தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டி- பா.ஜ.க. அதிர்ச்சி

Published On 2023-10-17 07:49 GMT   |   Update On 2023-10-17 07:50 GMT
  • கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
  • தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் சந்திரசேகரராவ் கட்சி காங்கிரஸ் பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் காசானி கூறியதாவது

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 87 இடங்களில் போட்டியிடும்.

விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.

2-வது வேட்பாளர் பட்டியல் உடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும்.

கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகருமான என்.டி. ராமராவின் மகன் நந்தமுரிபாலகிருஷ்ணா தலைமையில் போட்டியிடுவோம். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் இடம்பெறும் என பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News