இந்தியா

மகாராஷ்டிராவில் பயணிகள் ரெயில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

Published On 2025-09-17 23:36 IST   |   Update On 2025-09-17 23:36:00 IST
  • 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
  • விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் மும்பை சென்ட்ரல்-வல்சாத் பயணிகள் ரெயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த ரெயில்  7.56 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்த போது மின்சார என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு புகை கிளம்பியது.

உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

பாதுகாப்பு நடவடிக்கையாக எஞ்சினுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

Tags:    

Similar News