இந்தியா
ஆந்திராவில் ஒரு மாணவன், ஒரு ஆசிரியர் கொண்ட அரசு பள்ளி
- கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
- ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
ஆந்திர மாநிலம் மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் படித்தனர். கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை தேடி ஐதராபாத்திற்கு புலம் பெயர்ந்து சென்றனர்.
இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
ஒரு சில காரணங்களால் 3 மாணவர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. இந்த பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரே ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.