இந்தியா

ரேபிஸ் தடுப்பூசி போட 20 கி.மீ. நடந்த 95 வயது மூதாட்டி... வைரலாகும் வீடியோ

Published On 2025-07-12 15:43 IST   |   Update On 2025-07-12 15:43:00 IST
  • ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
  • மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசாவின் நுவபாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி மங்கல் பாரி மொஹாரா. ஒரு அடி எடுத்து வைப்பது கூட அவருக்கு சிரமமானது. இந்த சூழலில் சமீபத்தில் மூதாட்டி மொஹாராவை ஒரு நாய் கடித்தது.

அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளித்த உள்ளூர் மருத்துவர் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும், ஆனால் தற்போது தன்னிடம் தடுப்பூசி இல்லை என்று கூறினார்.

இதனால் மோஹாரா, தடுப்பூசி போடுவதற்காக தனது கிராமத்திற்கு அருகிலுள்ள சீனப்பள்ளி சமூக சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.

பத்து கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள சீனப்பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், மொஹாரா கால்நடையாகவே புறப்பட்டார்.

ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பெரும் சிரமங்களுக்கு இடையில் அங்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர் கிராமத்திற்குத் 10 கி.மீ திரும்பி நடந்தார். மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News