இந்தியா

பீகாரில் டிராக்டர் மீது கார் மோதி விபத்து- திருமண கோஷ்டியினர் 8 பேர் பலி

Published On 2025-05-06 10:33 IST   |   Update On 2025-05-06 10:33:00 IST
  • உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
  • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இதில் 10 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சமேலி பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மேலும் 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி பலியான 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான அனைவரும் ஆண்கள். அவர்கள் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News