இந்தியா

விஜயவாடாவில் களிமண்ணால் செய்யப்பட்ட 72 அடி உயர மகா கணபதி சிலை

Published On 2025-08-22 11:26 IST   |   Update On 2025-08-22 11:26:00 IST
  • விநாயகர் சிலை முழுவதும் இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன.
  • விநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விஜயவாடா, வித்யாதரபுரம் பஸ் நிலையம் அருகே முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் செய்யப்பட்ட 72 அடி உயர மகா கணபதி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை முழுவதும் இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன. இந்த விநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகரின் ஒரு பக்கம் நாகேஸ்வர சாமியும், மறுபுறத்தில் ஸ்ரீ வாசுகி கன்னிகா பரமேஸ்வரி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 40 கலைஞர்களால் கடந்த 2 மாதங்களாக விநாயகர் சிலையை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாக விழா குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News