இந்தியா

மாநில எல்லையில் அரசு பஸ்கள் உள்பட 5 வாகனங்களுக்கு தீ: நக்சலைட்டுகள் அட்டூழியம்

Published On 2023-12-21 04:19 GMT   |   Update On 2023-12-21 04:19 GMT
  • பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
  • ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

திருப்பதி:

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.

பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.

அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

Tags:    

Similar News