இந்தியா

கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.. தெலுங்கானாவில் சோகம்

Published On 2025-06-15 20:04 IST   |   Update On 2025-06-15 20:04:00 IST
  • ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
  • ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.

தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சமீபத்திய மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த அந்த இளைஞர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கோதாவரி படித்துறையில் தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் கொண்டபோச்சம்மாவிலும், ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News