இந்தியா

குரங்கு அம்மை

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

Published On 2022-08-13 19:18 GMT   |   Update On 2022-08-13 19:18 GMT
  • டெல்லியில் வசிக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு.
  • இதன்மூலம் டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு.

புதுடெல்லி:

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் டெல்லிவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்தப் பெண் நைஜீரியா சென்று வந்துள்ளார். டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News