இந்தியா

நிலவில் தடம் பதித்த இந்தியா - குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்

Published On 2023-08-25 04:40 IST   |   Update On 2023-08-25 04:40:00 IST
  • இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக கால் பதித்தது.
  • அன்று பிறந்த குழந்தைகளுக்கு ஒடிசா மாநில பெற்றோர் சந்திரயான் என பெயர் வைத்து மகிழ்ந்தனர்.

புவனேஷ்வர்:

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. 

விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் கால் பதித்த நேரத்தில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 3 ஆண், ஒரு பெண் என மொத்தம் 4 குழந்தைகளுக்கு சந்திரயான் என பெற்றோர் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்த சாதனை நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Tags:    

Similar News