- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
- தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது.
புவனேஷ்வர்:
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஒடிசாவின் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் கோரமண்டல் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது. இதில் ஹவுரா ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும், சரக்கு ரெயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.