இந்தியா
கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
- ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஜெயராமன் இறங்கினார்.
- 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனாவில் உள்ள ஒரு ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஜெயராமன் இறங்கினார். அவர் உள்ளே சிக்கிக்கொண்டதையடுத்து, உடனடியாக அவரை மீட்க சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோர் தொட்டியில் இறங்கினர்.
ஆனால் 3 பேரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லாததால் சக தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மற்ற 2 பேர் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.