இந்தியா

கங்கை நதியில் செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு

Published On 2024-08-26 15:34 IST   |   Update On 2024-08-26 15:34:00 IST
  • 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர்.
  • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள புனித தலங்களை பார்வையிட பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகஸ்ட் 24 அன்று சென்றுள்ளனர்.

அப்போது கங்கை நதியின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். அப்போது வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை அவர்கள் மீட்டனர். மற்ற 2 பேரில் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்தியாவில் ஆபத்தான இடங்களில் செல்பி, ரீல்ஸ் எடுக்கும் போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News