இந்தியா
அடுக்குமாடி குடியிருப்பில் தீ: உயிருக்கு பயந்து 7வது மாடியில் இருந்து குதித்த 3 பேர் பலி
- டெல்லியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயில் இருந்து தப்பிக்க 7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிழந்தனர்.
தீ விபத்தில் யாதவ் மனைவியும், மூத்த மகனும் உயிர் தப்பித்தனர். இவர்கள் லேசான காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.