இந்தியா
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

2021- 22ம் ஆண்டிற்கான வைப்பு நிதி வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம்

Published On 2022-06-03 22:28 IST   |   Update On 2022-06-03 22:28:00 IST
ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வைப்புத்தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது நான்கு பத்தாண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2021-22க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது.

இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இபிஎஃப் திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அரசின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளது.

இதற்காக தொழிலாளர் அமைச்சகம் தனது ஒப்புதலுக்கான முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது.

இஅரசாங்கத்தின் வட்டி விகிதத்தை உறுதிப்படுத்திய பிறகு, இபிஎஃப்ஓ நிதியாண்டிற்கான நிலையான வட்டி விகிதத்தை இபிஎஃப் கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021-ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Tags:    

Similar News