இந்தியா
பிரதமர் மோடி

டோக்கியோவில் 24-ம் தேதி குவாட் மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

Published On 2022-05-20 00:11 GMT   |   Update On 2022-05-20 00:11 GMT
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்துள்ள போர் தீவிரமடைந்துள்ள நிலையில் குவாட் அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
புதுடெல்லி:

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது. 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர்.

இந்நிலையில், குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந் து கொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். 

மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலக பிரச்சினைகள் குறித்து குவாட் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள இம்மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News