இந்தியா
கொரோனா தடுப்பூசி

18 கோடிக்கும் மேல் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் மாநிலங்களில் உள்ளன

Update: 2022-05-10 08:52 GMT
இந்தியாவில் 12 முதல் 14 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 16-ஆம் தேதி தொடங்கியது என மத்திய அரசு கூறியுள்ளது.
புது டெல்லி :

சுமார் 18.15 கோடிக்கும் மேல் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  இருப்பதாக  மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 193.53 கோடி தடுப்பூசிகள் மையத்தின் இலவச வழி வாயிலாகவும், நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொள்முதல் செய்து வழங்கும். 

இந்தியாவில் 12 முதல் 14 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 16-ஆம் தேதி தொடங்கியது. இதன் மூலம்,  இதுவரை 3.06  கோடிக்கு அதிகமான முதல் தவணை தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News