இந்தியா
கோப்புப்படம்

உ.பியில் கொடூரம்: கடத்தி பலாத்காரம் செய்ததாக புகார் செய்ய சென்ற சிறுமியை கற்பழித்த போலீஸ் சஸ்பெண்ட்

Published On 2022-05-04 11:27 IST   |   Update On 2022-05-04 13:02:00 IST
குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி அன்று போபாலுக்கு கடத்தப்பட்டு நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர், சிறுமியை அவரது கிராமத்தில் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிறுமி அவரது தந்தையிடம் விவரித்ததை அடுத்து, சிறுமி அவரது உறவினருடன் லலித்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க சென்றனர். அப்போது, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறுமியை மறுநாள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

இந்நிலையில், காவல் நிலையப் பொறுப்பாளர் அதிகாரி திலக்தாரி சரோஜ்  சிறுமியை காவல் நிலையத்திற்குள் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அங்கு மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்து அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல்

Similar News