இந்தியா
தீ விபத்தில் ஏற்பட்ட பசு காப்பகம்

உ.பியில் கால்நடை காப்பகத்தில் பயங்கர தீ விபத்து- 38 பசுக்கள் பலி

Published On 2022-04-12 05:14 GMT   |   Update On 2022-04-12 07:01 GMT
மாவட்ட மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார் சிங் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளத என்றார்.
உத்தர பிரதேசம் மாநிலம், காஜியாபாத் மாவட்டம் இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கனவானி கிராமத்தில் பசுக்கள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 150 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென பசுக்கள் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் சுமார் 38 பசுக்கள் தீயில் சிக்கி உயிரிழந்தன.

இதற்கிடையே நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் காப்பகத்தின் அருகில் இருந்த குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் விபத்து ஏற்பட்டிருக்கிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார் சிங் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, பின்னர் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

இதையும் படியுங்கள்.. ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு - இலங்கையில் அவலம்
Tags:    

Similar News