இந்தியா
மைக்ரோ ஓவனுக்குள் 2 மாத பெண் குழந்தை பிணம்
தெற்கு டெல்லியில் உள்ள சிராத்தில்லியில் மைக்ரோ ஓவனுக்குள் பிறந்து 2 மாதம் ஆன பெண் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெற்கு டெல்லியில் உள்ள சிராத்தில்லியில் மைக்ரோ ஓவனுக்குள் பிறந்து 2 மாதம் ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் அங்கு சென்று அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் தாய் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். பெண் குழந்தை பிறந்ததால் அவர் மனமுடைந்து இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீஸ் இணை கமிஷனர் பெனிடா மேரி ஜெய்கர் கூறும்போது, "அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களான குல்ஷன் கவுசிக், டிம்பிள் ஆகியோர் போலீசார் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
பெண் குழந்தையான அனன்யா கடந்த ஜனவரி மாதம் பிறந்தார். அன்றில் இருந்து டிம்பிள் கவுசிக் வருத்தம் அடைந்தார். அவர் தனது கணவருடன் சண்டையிட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.