இந்தியா
சபரிமலை கோவில்

சபரிமலை சன்னிதானத்தில் 60 மீட்டரில் பிரம்மாண்ட நடைபந்தல்

Update: 2022-03-16 05:45 GMT
மத்திய அரசின் ரூ.10 கோடி நிதி உதவியுடன் பம்பை முதல் சன்னிதானம் வரை நடைபாதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருவனந்தபுரம்:

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பலரும் பம்பை முதல் சன்னிதானம் வரை நடந்தே செல்வது வழக்கம்.

இந்த நடைபாதையை சீரமைக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. அதன்படி மத்திய அரசின் ரூ.10 கோடி நிதி உதவியுடன் பம்பை முதல் சன்னிதானம் வரை நடைபாதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

பக்தர்கள் நடந்து செல்லும் அப்பாச்சி மேடு, நீலிமலையில் தற்போது 700 மீட்டர் தூரத்துக்கு பாதை சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன.

இந்த பணி முடிவடைந்ததும், சன்னிதானம் அருகே பிரம்மாண்ட நடைபந்தல் சுமார் 60 மீட்டரில் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் சன்னிதானம் செல்லும் பக்தர்கள் அங்கு ஓய்வெடுக்கலாம்.

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்கள் தொடங்கும் முன்பு இச்சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விடும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News