இந்தியா
பிரதமர் மோடி

லதா மங்கேஷ்கர் மறைவு: பிரதமர் மோடியின் காணொலி பிரசாரம் ரத்து

Published On 2022-02-06 08:26 GMT   |   Update On 2022-02-06 08:26 GMT
கோவா மாநிலத்தில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா, மத்திய மந்திரி நிதின் கட்காரியின் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பாஜக ரத்து செய்துளள்து.
புதுடெல்லி:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து கோவா மாநிலத்தில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா, மத்திய மந்திரி நிதின் கட்காரியின் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பாஜக ரத்து செய்துள்ளது. பிரதமர்  மோடியின் காணொலி வாயிலான பிரசாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொகுதி அளவிலான சிறிய நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்படுகிறது.  இத்தகவலை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி, இன்று மாலை 5.30 மணிக்கு காணொலி வாயிலாக வடக்கு கோவாவில் உள்ள வாக்காளர்களிடையே உரையாற்ற செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் வரும் 14ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Tags:    

Similar News