இந்தியா
கைது

திருப்பதியில் ஜன சேனா கட்சி பிரமுகரை வெட்டிக்கொன்ற 3 பேர் கைது

Published On 2022-02-03 07:22 GMT   |   Update On 2022-02-03 07:22 GMT
திருப்பதியில் ஜன சேனா கட்சி பிரமுகரை வெட்டிக்கொன்றது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

திருப்பதி காந்திபுரத்தை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 36). ஜன சேனா கட்சி பிரமுகர். இவர் கடந்த மாதம் 30-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மகபூப் பாஷாவை தேடிச் சென்றனர்.

அப்போது அங்குள்ள கடையின் முன்பாக மகபூப் பாஷா ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த எம்.ஆர்.பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகபூப் பாஷா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.பள்ளி போலீசார் ரேணிகுண்டா-சந்திரகிரி பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த தாமோதர் (23), வெங்கடேஷ் (22), பாலாஜி (23) என தெரியவந்தது.

திருப்பதி காந்திபுரத்தில் எனக்கு சொந்தமான வீட்டுமனை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த முரளி ரெட்டி என்பவருக்கு வீட்டுமனை விற்பனையை செய்வதாக கூறி ரூ.28 லட்சத்தை வாங்கினேன். ஆனால் வீட்டு மனையை அவருக்கு கிரையம் செய்து தரவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தேன்.

பணத்தை திருப்பித் தராததால் திருப்பதியை சேர்ந்த ஜனசேனா கட்சி பிரமுகர் மகபூப் பாஷாவிடம் என்னிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தருமாறு கூறியுள்ளார்.

இதனால் என்னிடம் பணத்தை கேட்டு மகபூப்பாஷா மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்து என்னுடைய நண்பர்களான வெங்கடேஷ், பாலாஜி ஆகியோருடன் அவரது வீட்டிற்குச் சென்று பணத்தை தருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே அழைத்து வந்து வெட்டி கொலை செய்தேன் என்றார்.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News