இந்தியா
புல்லட் ரெயில் திட்டம்: டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
அகமதாபாத் சபர்மதியில் கட்டப்பட்டு வரும் புல்லெட் ரெயில் திட்டம் தேசிய திட்டம் என கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது.
மும்பை- அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தில் அகமதாபத் சபர்மதியில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்தத்தை மோன்ட்டே கார்லோ லிமிடெட் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம், புல்லட் ரெயில் தேசிய திட்டம் எனக் கருத்து தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி எம்.ஆர். ஷா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தரமற்ற சாலைகளை போட்டால் தூக்கில் தொங்குவேன்- அதிகாரிகளை மிரட்டிய எம்.எல்.ஏ