இந்தியா
கேரள ஐகோர்ட்

துணை வேந்தர் நியமன சர்ச்சை: கேரள கவர்னருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2021-12-18 08:58 GMT   |   Update On 2021-12-18 08:58 GMT
கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தராக மீண்டும் ரவீந்திரன் கோபிநாத் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள கண்ணூர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் கோபிநாத் ரவீந்திரன்.

கோபிநாத் ரவீந்திரன் பதவிகாலம் முடிந்தநிலையில் மீண்டும் அவரை அதே பதவியில் நியமிக்குமாறு மாநில அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து அவரை மீண்டும் துணை வேந்தராக கவர்னர் ஆரிப் முகமது கான் நியமனம் செய்தார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசு தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.மேலும் மாநில உயர் கல்வித்துறை மந்திரி பிந்து இது தொடர்பாக பரிந்துரை கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தராக மீண்டும் ரவீந்திரன் கோபிநாத் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரேம் சந்திரன் மற்றும் ஜோஸ் ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திரன் கோபிநாத்தை மீண்டும் துணை வேந்தராக நியமித்தது பல்கலைகழக விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அவரது நியமனத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நேற்று நடந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி மணிக்குமார், கண்ணூர் பல்கலைக்க கழக துணை வேந்தர் மறு நியமனம் தொடர்பாக கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அந்த நோட்டீசை சிறப்பு அதிகாரி ஒருவர் மூலம் வழங்கவும் உத்தரவிட்டார்.

கேரள ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News