செய்திகள்
அமைச்சரவை கூட்டம் (கோப்பு படம்)

வேளாண் சட்டங்கள் வாபஸ்- 24ம் தேதி ஒப்புதல் அளிக்கிறது அமைச்சரவை

Published On 2021-11-21 16:20 GMT   |   Update On 2021-11-21 16:20 GMT
வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள தயாராக இல்லை.
புதுடெல்லி:

விவசாயிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் தொடார் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்றும் கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள தயாராக இல்லை. 

வேளாண் சட்டங்களை வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முறைப்படி வாபஸ் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின்போது பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர். 



இந்நிலையில்,  நவம்பர் 24 ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதாகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 29ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. 

Tags:    

Similar News