செய்திகள்
குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கி சூடு- மகாராஷ்டிர மீனவர் பலி
சர்வதேச கடல் எல்லை அருகில் மீனவர்கள் சென்றபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
தேவபூமி துவாரகா:
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். சர்வதேச கடல் எல்லை அருகில் அவர்கள் சென்றபோது, அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிர மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (வயது 32) உயிரிழந்தார். ஒரு மீனவர் காயமடைந்தார்.
நேற்று மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்த மீனவரின் உடல் குகா துறைமுகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. போர்பந்தர் நபி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.