செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்: தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடங்கிய இணையதளம்

Published On 2021-07-13 14:05 GMT   |   Update On 2021-07-13 14:13 GMT
கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருந்ததால் நீட் தேர்வை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.  கொரோனா  தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி  நீட் தேர்வு  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்தது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருந்ததால் நீட் தேர்வை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக  மத்திய அரசு  ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு மாலை 5 மணி முதல் விண்ணப்பபிக்கலாம் என்ற நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் பதிவு செய்ய முயற்சி செய்ததால் ஆன்லைன் விண்ணப்பதிவு முடங்கியது.
Tags:    

Similar News