செய்திகள்
மீட்புப்பணியில் வீரர்கள்

மும்பை - வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 500 பேர் பத்திரமாக மீட்பு

Published On 2019-07-27 14:06 IST   |   Update On 2019-07-27 14:27:00 IST
மும்பையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. அதில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.

பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துசென்றன.



இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி ரெயிலில் இருந்து 500க்கு மேற்பட்ட பயணிகளை மீட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், வெள்ளத்தில் சிக்கிய பயணிகளை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு வருகிறோம். அவர்களை பதல்பூரில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.  மற்றவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

Similar News