செய்திகள்

பதவி வேண்டாம் என கூறிய அருண் ஜெட்லியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2019-05-29 15:39 GMT   |   Update On 2019-05-29 15:39 GMT
புதிய அமைச்சரவையில் தனக்கு பதவி வேண்டாம் என அருண் ஜெட்லி கூறிய நிலையில், அவரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமருடன், பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

ஆனால், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தற்போது மத்திய நிதி மந்திரியாக பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு அருண் ஜெட்லியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, 
அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்ற முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

உடல் நிலை காரணமாக பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திலும் அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை. கடந்த சில தினங்களாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. எனினும், சமீபத்தில் தனது வீட்டில் நிதித்துறை பணிகள் தொடர்பாக, உயர் அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News