செய்திகள்

கிரிக்கெட்டில் நடுவர்களை சபிப்பதுபோல் சிலர் தேர்தல் கமிஷனை வசைபாடுகிறார்கள் - மோடி

Published On 2019-05-10 09:59 GMT   |   Update On 2019-05-10 09:59 GMT
கிரிக்கெட்டில் அவுட் ஆகிவிட்டு வெளியே செல்லும் ஆட்டக்காரர்கள் நடுவர்களை சபிப்பதுபோல் சிலர் தேர்தல் கமிஷனை இப்போது வசைபாடுகிறார்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #AbusingEC #Modi #LSPolls
சண்டிகர்:

அரியானா மாநிலத்தின் ரோட்டக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை காங்கிரஸ் கட்சியினர் ‘நடந்து முடிந்த கதை’ என்கின்றனர். இதே விவகாரம் தொடர்பாக முன்னர் கருத்து கூறிய ராஜீவ் காந்தி, ஒருபெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்றார்.

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று நடத்திய கமல்நாத்தை பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக்கி, தற்போது மத்தியப்பிரதேசத்தின் முதல் மந்திரியாகவும் அமர்த்தியுள்ளனர். காங்கிரசின் இந்த ஆணவத்துக்கு மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் தகுந்த பதிலடி தருவார்கள்.



பாராளுமன்ற தேர்தலில் முதல் மூன்றுகட்ட வாக்குப்பதிவு வரை எதிர்க்கட்சியினர் மோடியை வசைபாடி வந்தனர். பின்னர், காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை அறிந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை வசைபாடினர். இப்போது, அவுட் ஆகிவிட்டு வெளியே செல்லும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப்போல் தேர்தல் கமிஷனை வசைபாட தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #AbusingEC #Modi #LSPolls
Tags:    

Similar News