செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமீறல் - மோடி, அமித் ஷா மீதான வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியது. #SCissuesnotice #noticetoEC #Modi #AmitShah #ModelCodeofConduct
புதுடெல்லி:
பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #SCissuesnotice #noticetoEC #Modi #AmitShah #ModelCodeofConduct