செய்திகள்

மத்திய-மந்திரி மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Published On 2019-04-29 18:22 GMT   |   Update On 2019-04-29 18:22 GMT
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்திய-மந்திரி மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #ManekaGandhi #ElectionCommission
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி சுல்தான்பூர் தொகுதியில் உள்ள சர்கோதா கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட மேனகா காந்தி, தனக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஏ.பி.சி.டி., என வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்றார் போல் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று பேசியிருந்தார்.



இந்நிலையில் மேனகா காந்தியின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற நடத்தை விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

மேனகா காந்தி கடந்த 11-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியிருந்தார். அதனால், பொதுக் கூட்டம், பேரணி, பேட்டி போன்ற செயல்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் அவருக்கு கடந்த 15-ம் தேதி 48 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #ManekaGandhi #ElectionCommission 
Tags:    

Similar News