செய்திகள்

என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கிண்டல்

Published On 2019-04-24 20:13 IST   |   Update On 2019-04-24 20:13:00 IST
ஒடிசாவின் பலசோர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி நவீன் பட்நாயக், என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வீட்டுக்கு சென்ற பின்னரே நான் ஒடிசாவுக்கு வருவேன் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஒடிசாவின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியை பார்வையிட பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. அதை பார்வையிட அவருக்கு நேரமும் இல்லை.

நடைபெற்று முடிந்த மூன்று கட்ட பாராளுமன்ற தேர்தலின் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், மே 23ம் தேதிக்கு பிறகு நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். எனவே, நான் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
Tags:    

Similar News