செய்திகள்

ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் -நிதின் கட்காரி

Published On 2019-04-19 16:14 GMT   |   Update On 2019-04-19 16:13 GMT
ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். #nitingadkari #rahulgandhi
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி இத்திட்டம் தொடர்பாக பேசுகையில், 5 கோடி குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். அந்த குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர், இத்திட்டத்தால் நேரடியாக பலன் பெறுவார்கள். இந்த திட்டத்தால் ஏற்படும் நிதி தாக்கத்தை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்து விட்டது. கடந்த சில மாதங்களாக எல்லா கணக்கீடுகளையும் போட்டுப் பார்த்து விட்டோம். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த திட்டத்தை இறுதி செய்து உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

இதனை மத்திய அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இப்போது ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். சத்தீஷ்கார் மாநிலம் ஜாஸ்பூரில் பேசிய நிதின் கட்கரி, குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய்யை கூறியுள்ளார். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்திக்கு மக்கள் வாக்களித்தனர். அவர்கள் எப்போது வருமையை ஒழிப்போம் என்றார்கள், ஆனால் அவர்கள் அதனை ஒழித்தது கிடையாது. அதேபோன்றுதான் ராகுல் காந்தியும் பொய்யை பரப்புகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.  #nitingadkari #rahulgandhi 
Tags:    

Similar News