செய்திகள்

துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏவின் வெற்றி செல்லாது- குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு

Published On 2019-04-12 10:57 GMT   |   Update On 2019-04-12 10:57 GMT
குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #GujratBJPMLA #CourtTerminatesMLA
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கு விசாரணையின்போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.



இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா எம்எல்ஏ பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. #GujratBJPMLA #CourtTerminatesMLA 
Tags:    

Similar News