செய்திகள்

ஆந்திராவில் லாரி-மினி பஸ் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி

Published On 2019-04-12 08:21 GMT   |   Update On 2019-04-12 08:21 GMT
ஆந்திர மாநிலத்தில் லாரியும் மினி பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndhraAccident
அனந்தபூர்:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. மினி பஸ்சின் முன்பகுதி நொறுங்கி, இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டதும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #AndhraAccident
Tags:    

Similar News