செய்திகள்

பராமரிப்பு பணி - ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2019-04-11 23:57 GMT   |   Update On 2019-04-11 23:57 GMT
எந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #SupremeCourt #SterliteCopperPlant
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததோடு, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்து இருப்பதால், எந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. #SupremeCourt #SterliteCopperPlant 
Tags:    

Similar News