செய்திகள்

ம.பி. முதல்வர் கமல்நாத் மகனின் சொத்து மதிப்பு ரூ.660 கோடி

Published On 2019-04-09 17:49 GMT   |   Update On 2019-04-09 17:49 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த முதல் மந்திரி கமல்நாத் மகன் நகுல் நாத்துக்கு 660 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகிப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத். இவரது மகன் நகுல் நாத் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் நகுல் நாத் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்புக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் விவரம் வருமாறு:

அசையும் சொத்துக்களின் மதிப்பு 615 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 42 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு 869 கிராம் எடையில் தங்க கட்டிகளும், 7 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளது. மேலும் 147 காரட் வைரம் மற்றும் கல் நகைகள் உள்ளிட்ட நகைகள் 78 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
Tags:    

Similar News